25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"தயவுசெய்து லோன் வாங்கி கார் வாங்காதீங்க!" – நடிகர் அப்புக்குட்டி உருக்கம்.

கண்ணன் சாவித்திரி தயாரித்து இயக்கியுள்ள"பண்டமாற்று" திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் அப்புக்குட்டி, தன் சொந்த வாழ்க்கைப் பாடத்திலிருந்து ஒரு முக்கிய எச்சரிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:

"இந்தப் படத்தின் கதை வட்டிக்குக் கடன் வாங்குவது, காரை அடமானம் வைப்பது மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியது. நானும் என் காரை அடமானம் வைத்து பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். திரையுலகில் 10 சதவீத நடிகர்கள் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள்; எல்லாரும் வசதியானவர்கள் அல்ல.

என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்... தயவுசெய்து லோன் போட்டு கார் வாங்காதீர்கள். நமக்கு ஒரு மாதம் வருமானம் வந்தால் பல மாதங்கள் வருமானம் வராது. அப்புறம் தவணை கட்ட முடியாமல் மாட்டிக்கொள்வீர்கள்." — நடிகர் அப்புக்குட்டி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News